உலகம் செய்தி

தென்னாப்பிரிக்காவில் இடிந்து விழுந்த இந்து ஆலயம் – புலனாய்வாளர்கள் தீவிர விசாரணை!

தென்னாப்பிரிக்காவில் இந்து கோவில் ஒன்றின் கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 05 ஆக அதிகரித்துள்ளது.

இது தொடர்பில் புலனாய்வாளர்கள் விசாரணைகளை தொடங்கியுள்ளதாக நேற்று அறிவித்துள்ளனர்.

டர்பனுக்கு (Durban) வடக்கே சுமார் 25 கிலோமீட்டர் (15 மைல்) தொலைவில் உள்ள வெருலமில் (Verula)  இந்த கோவில் அமைந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

கோவிலில் மேல் மாடிக் கட்டடம் நிர்மாணிக்கப்பட்டு வந்த நிலையில், இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் அங்கு பணியாற்றிய ஒருவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் அறிவித்திருந்தனர்.

பின்னர் மேற்கொள்ளப்பட்ட மீட்பு பணிகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

டர்பனை மையமாகக் கொண்ட பிராந்திய அரசாங்கம், அங்கீகரிக்கப்பட்ட கட்டிடத் திட்டங்கள் எதுவும் இல்லாததால், அந்த இடத்தில் கட்டுமானம் சட்டவிரோதமானது என்று முதற்கட்ட அறிக்கைகள் தெரிவிகப்பதாக குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் புலனாய்வாளர்கள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!