மரண அபாயத்தைக் குறைக்கும் Coffee – ஆய்வில் தகவல்
துடிப்பான வாழ்க்கைமுறையைக் கடைப்பிடிக்காதோருக்குக் காப்பி உதவலாம் என்று ஆய்வொன்று கூறியுள்ளது.
ஒரு நாளில் குறைந்தது 6 மணி நேரம் உட்கார்ந்திருப்போரிடையே காப்பி குடிப்போரை விட காப்பி குடிக்காதோருக்கு மரண அபாயம் அதிகம் இருக்கக்கூடும் என்று தெரியவந்துள்ளது.
காப்பி குடிக்காதவர்களுக்கு மரணமடையும் சாத்தியம் 1.6 மடங்கு அதிகம் என்று BMC Public Health சஞ்சிகையில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகள் கூறின.
இந்நிலையில் காப்பியின் தாக்கத்தைப் பற்றி மேலும் ஆராயவேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
அமெரிக்காவில் 2007ஆம் ஆண்டுக்கும் 2018ஆம் ஆண்டுக்கும் இடையே நடத்தப்பட்ட தேசிய சுகாதார, ஊட்டச்சத்துக் கருத்தாய்வுகளின் முடிவுகள் ஆராயப்பட்டன.
10,639 பெரியவர்களிடம் கருத்தாய்வுகள் நடத்தப்பட்டன. அமெரிக்காவின் மக்கள்தொகையில் 52 விழுக்காட்டினருக்குக் காப்பி அருந்தும் பழக்கம் உள்ளது.
அவர்களில் சுமார் 48 சதவீதமானோர் அன்றாடம் குறைந்தது 6 மணி நேரம் அமர்ந்திருந்திப்பதாகக் கூறினர்.
காப்பி அருந்தாமல் 23 சதவீதமானோர் குறைந்தது 6 மணி நேரம் உட்கார்ந்திருப்பதாகக் குறிப்பிட்டனர்.