கிறிஸ்துமஸ் சந்தையில் தாக்குதலுக்கு திட்டம் – ஜெர்மனில் 05 பேர் கைது!
பவேரியாவில் உள்ள கிறிஸ்துமஸ் சந்தையில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக கூறப்படும் 05 இஸ்லாமியர்களை ஜெர்மன் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
காவல்துறை மற்றும் வழக்கறிஞர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
22, 28 மற்றும் 30 வயதுடைய மூன்று மொராக்கோ நாட்டவர்கள், 56 வயதுடைய ஒரு எகிப்திய நாட்டவர் மற்றும் 37 வயதுடைய ஒரு சிரிய நாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஜெர்மனிக்கும் ஆஸ்திரியாவிற்கும் இடையிலான சுபென் எல்லைக் கடவையில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் நெரிசலான சந்தைக்குள் வாகனத்தை ஓட்டிச் சென்று தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக புலனாய்வுதுறையினர் தகவல் வழங்கியதாகவும், அதன் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.





