விமானத்தில் ஏற அனுமதி மறுப்பு – அரை மணி நேரத்தில் 5 கிலோ டுரியான் சாப்பிட்ட சீன குடும்பம்
விமானத்தில் டுரியானை எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் சீனாவைச் சேர்ந்த லீ குடும்பத்தினர் அரை மணி நேரத்தில் 5 கிலோ டுரியானைச் சாப்பிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
விடுமுறைக்காகத் தாய்லந்து சென்றபோது அளவுக்கு அதிகமாக டுரியான் பழங்களை கொள்வனவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் குடும்பத்தினர் ஐவரும் விமான நிலையத்திற்கு வெளியே நின்று பழங்களைச் சாப்பிடும் காணொளி வெளியாகியுள்ளது.
டுரியான் வாடை வீசியதால் அவர்கள் இரகசியமாகப் பழங்களைக்கொண்டு செல்வதாகச் சக பயணிகள் சந்தேகப்பட்டனர்.
அதற்காகச் சங்கடப்பட்டு லீ குடும்பத்தினர் மன்னிப்புக் கேட்டனர். இனி டுரியானைக் காணவோ டுரியான் என்ற சொல்லைக் கேட்கவோ விருப்பமில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.





