இலங்கையில் குழந்தைகள் ஸ்மார்ட்போன் (smartphones ) பயன்படுத்த தடை!
இலங்கையில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஸ்மார்ட்போன் (smartphones ) பயன்படுத்துவதைத் தடை செய்ய திட்டமிட்டுள்ளதாக குழந்தைகள் நல அமைச்சர் சரோஜா பால்ராஜ் தெரிவித்தார்.
மாணவர்கள் கலந்து கொண்ட ஒரு விழாவில் பேசிய அமைச்சர், இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மொபைல் போன்களை வைத்திருக்கவோ அல்லது பயன்படுத்தவோ அனுமதிக்கப்படுவதை அரசாங்கம் தடை செய்யும் என உறுதியளித்துள்ளார.
(Visited 6 times, 7 visits today)





