இந்தியா செய்தி

சென்னை, வேலூர் உட்பட 7 மாவட்டங்களில் ஸ்கரப் டைபஸ் பாதிப்பு உயர்வு.

தமிழகத்தில் உண்ணி காய்ச்சல் என அறியப்படும் ஸ்கரப் டைபஸ் பாதிப்பு பரவாமல் தடுக்கச் சுகாதா​ரத் துறை தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாவட்ட அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

ரிக்​கட்​ஸியா பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட ஒட்டுண்ணி கடிப்பதன் மூலம் இந்த நோய் பரவுகிறது. காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு மற்றும் தடிப்புகள் இதன் முக்கிய அறிகுறிகளாகும். சென்​னை, காஞ்​சிபுரம், வேலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்கள் மற்றும் மலைப்பகுதிகளில் இதன் பாதிப்பு அதிகமாக உள்ளது.

ஆந்திராவில் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், சென்னை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நோய் பரவல் ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது. விவ​சா​யிகள், புதர் மற்றும் வனப் பகுதியினர், கர்ப்பிணிகள் போன்றோருக்குப் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எலிஸா பரிசோதனை மூலம் இந்நோயைக் கண்டறிந்து, அசித்​ரோமைசின் போன்ற ஆன்ட்டிபயாடிக் மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. கடந்த ஆண்டில் 5,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது தினமும் 10 முதல் 20 பேர் வரை அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு வருகின்றனர். இதையடுத்து தடுப்பு நடவடிக்​கைகள் எடுக்​கப்​பட்டு வரு​கின்​றன.

AJ

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!