போர் நிறுத்தம் மீறல் – தாக்குதலை நடத்திவிட்டு இஸ்ரேல் வெளியிட்ட அறிவிப்பு!
தெற்கு லெபனானின் ஆறு பகுதிகளில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக லெபனானின் பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு வெளியாகி சில மணிநேரங்களில் ஹெஸ்பொல்லாவுடனான போர் நிறுத்தம் மீறப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
இஸ்ரேலுக்கும் லெபனானின் ஆயுதக் குழுவான ஹெஸ்பொல்லாவுக்கும் இடையிலான போர் நிறுத்தம் நேற்று முன்தினம் அமுல்படுத்தப்பட்டது.
அமெரிக்கா மற்றும் பிரான்ஸின் தரகு ஒப்பந்தத்தின் கீழ் இந்த ஒப்பந்தம் அமுல்படுத்தப்பட்டது.
கடந்த 14 மாத காலமாக நீடித்த போரினால் பாதிப்படைந்த இரு நாடுகளின் மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்புவதை அனுமதிப்பதனை நோக்கமாகக் கொண்டு ஒப்பந்தம் அமுல்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், தெற்கு லெபனானின் ஆறு பகுதிகளை இஸ்ரேல் தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, எல்லைப் பகுதியில் உள்ள நகரங்களின் பாதுகாப்பு இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.