கொழும்பில் பெண்ணின் உயிரை காப்பாற்றிய காரின் Airbag

கிரிபத்கொட – உனுபிடிய பகுதியில் தமது கணவரை வெளிநாடு செல்வதற்காக வழியனுப்பி வைத்துவிட்டு வீடு திரும்பிய மனைவி விபத்திற்குள்ளான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
கார் ஒன்றும் கனரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், காரில் உள்ள பாதுகாப்பு பலூன் இயங்கியதில் காரை செலுத்திய அப்பெண்ணுக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், காரின் பின் இருக்கையில் இருந்த ஒருவர் சிறு காயங்களுக்குள்ளாகியதால் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
(Visited 33 times, 1 visits today)