தொடர் தோல்வி காரணமாக கேப்டன் பதவியில் இருந்து பட்லர் விலகல்

சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது.
இதில் இங்கிலாந்து விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியுற்றதால் அரையிறுதி வாய்ப்பை இழந்து விட்டது.
இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அடைந்த தோல்வியின் எதிரொலியாக இங்கிலாந்து அணியின் கேப்டனாக (ஒருநாள் + டி20) செயல்பட்டு வந்த பட்லர் விலகுவதாக அறிவித்துள்ளார்.
நாளை நடைபெறும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டிதான் அவர் கேப்டன் பதவி வகிக்கும் கடைசி போட்டி என கூறப்படுகிறது.
கேப்டன் பதவியில் இருந்து பட்லர் விலகியதை அடுத்து இங்கிலாந்தின் அடுத்த கேப்டனாக ஹாரி புரூக் நியமிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
(Visited 1 times, 1 visits today)