செய்தி விளையாட்டு

திடீரென பயிற்சி போட்டிகளில் இருந்து விலகிய பட்லர்

டி20 உலகக் கோப்பை தொடர் ஜூன் 2 ஆம் தேதி துவங்க உள்ளது. உலகக் கோப்பை தொடருக்கு முன் ஒவ்வொரு அணியும் பயிற்சி போட்டியில் விளையாடுவது வழக்கம்.

அந்த வகையில், இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையிலான பயிற்சி போட்டி நாளை நடைபெற இருக்கிறது.

இந்த தொடரில் இங்கிலாந்து அணியை வழிநடத்த இருக்கும் கேப்டன் ஜாஸ் பட்லர் மற்றும் லூயிஸ் தம்பதிக்கு மூன்றாவது குழந்தை பிறக்க உள்ளது.

இதையொட்டி, நாளை நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் இருந்து கேப்டன் ஜாஸ் பட்லர் விலகியுள்ளார்.

ஜாஸ் பட்லர் பயிற்சி போட்டியில் இருந்து விலகியதை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.

மேலும், ஜாஸ் பட்லர் – லூயிஸ் தம்பதிக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சார்பில் வாழ்த்து செய்தியும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

(Visited 9 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி