உக்ரைன் தலைநகரில் ரஷ்யா நடத்திய கொடூர தாக்குதல் – 20 பேர் காயம் – நகரம் முழுவதும் மின்சாரத் தடை

இன்று(10) அதிகாலை உக்ரைன் தலைநகரில் ரஷ்ய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் 20 பேர் காயமடைந்ததாகவும், நகரத்தில் மின்சாரம் தடைப்பட்டதாகவும் கியேவ் மேயர் விட்டாலி கிளிட்ச்கோ தெரிவித்தார்.
கியேவின் கிழக்குப் பகுதியில் உள்ள டினிப்ரோ ஆற்றின் இடது கரையில் மின் தடை மற்றும் நீர் விநியோகம் தடைபட்டுள்ளதாகவும் கிளிட்ச்கோ டெலிகிராமில் தெரிவித்தார்.
முக்கியமான உள்கட்டமைப்பை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல்கள், இரண்டு அடுக்குமாடி கட்டிடங்கள் மற்றும் வாகனங்களையும் சேதப்படுத்தியதாக அவர் மேலும் கூறினார்.
கியேவின் கிழக்குப் புறநகரில் உள்ள ப்ரோவரியில், மூன்று அடுக்குமாடி கட்டிடங்கள், நான்கு வணிக வளாகங்கள் மற்றும் பல வாகனங்கள் சேதமடைந்தன.
உக்ரைனின் மிகப்பெரிய தனியார் எரிசக்தி நிறுவனமான DTEK, அதன் பொறியாளர்கள் மின்சார விநியோகத்தை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறியது.