டிஜிட்டல் அடையாள அட்டைகளுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்திய பிரித்தானியமக்கள்!
பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டாமரின் டிஜிட்டல் அடையாள அட்டைகளை அறிமுகப்படுத்தும் திட்டங்களுக்கு மக்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதன்படி க 400,000 க்கும் மேற்பட்டோர் கையொப்பம் இட்டு ஒரு மனுவை கையளித்துள்ளதாக கூறப்படுகிறது.
தேசிய அடையாள அட்டைகளை அறிமுகப்படுத்துவதற்கு பெரும்பான்மையான பொதுமக்கள் ஆதரவளிப்பதாக சமீபத்திய கருத்துக் கணிப்புகள் காட்டினாலும், தனியுரிமை மற்றும் சாத்தியமான தரவு மீறல்கள் குறித்த அச்சங்களை விமர்சகர்கள் முன்வைத்துள்ளனர்.
ஏறக்குறைய 50000 பேர் ஒரு மணி நேரத்தில் இந்த திட்டத்திற்கு எதிராக வாக்களித்ததாக கூறப்படுகிறது.
பிரித்தானிய சீர்த்திருத்த கட்சியை சேர்ந்த ரிச்சர்ட் டைஸ், இந்தத் திட்டத்தை பயனற்றது என்று விமர்சித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த பில்லியன் கணக்கான பவுண்டுகள் செலவாகும் எனக் கூறியதுடன் இதை அறிமுகப்படுத்த பல ஆண்டுகள் ஆகும் எனவும் தெரிவித்தார்.





