பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தோரை இராணுவ முகாம்களுக்கு மாற்ற நடவடிக்கை!
பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தோரை விடுதிகளில் இருந்து பயன்படுத்தப்படாத இராணுவ முகாம்களுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புகலிட விடுதிகளின் பயன்பாட்டை முற்றிலுமாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தொழிற்கட்சியின் உந்துதலின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டதின் கீழ் அடுத்த மாதத்தில் இருந்து புலம்பெயர்ந்தோரை தங்க வைக்க இரண்டு தளங்கள் பயன்படுத்தப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்வெர்னஸில் (Inverness ) உள்ள கேமரூன் பாராக்ஸ் (Cameron Barracks) மற்றும் கிழக்கு சசெக்ஸில் (Sussex ) உள்ள க்ரோபரோ (Crowborough) இராணுவ பயிற்சி முகாம்களில் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பயன்படுத்தப்படாத இராணுவ முகாம்களில் 10,000 புலம்பெயர்ந்தோரை தங்க வைக்க பாதுகாப்பு அமைச்சகத்துடன் இணைந்து பணியாற்ற உள்துறை அலுவலகம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த திட்டமானது சிறிய படகுகளில் கால்வாயைக் கடப்பவர்களுக்கு இது மேலும் தடையாக இருக்கும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.





