செய்தி

பார்கிங் மூலம் ஆண்டுக்கு 2.3 மில்லியன் பவுண்ட் வருமானம் ஈட்டும் பிரித்தானியா!

பிரித்தானியாவில் நாடு முழுவதும் சுமார் 82,000 போக்குவரத்து அதிகாரிகள் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக அந்நாட்டின்  பார்க்கிங் அசோசியேஷன் தெரிவித்துள்ளது.

இதனால் பார்கிங் மற்றும் குற்றச்சாட்டுக்களால் ஆண்டுக்கு £2.3 பில்லியன் வருமானம் ஈட்டுவதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

சமீபத்தில் பிரித்தானியாவில் மேற்கொள்ளப்பட்ட நிதிவெட்டுக்கள் இராணுவத்தை பாதித்தபோதும் பார்கிங் உள்ளிட்ட வார்டன்களால் பெரும் இலாபம் ஈட்டப்பட்டு வருவதாக புள்ளிவிபர தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடு தழுவிய லாபம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு £961 மில்லியனில் இருந்து சமீபத்திய ஆண்டில் சுமார் £1.1 பில்லியனாக உயர்ந்துள்ளது. இந்த தொகையானது கடந்த ஆண்டுகளை விட 20 சதவீதம் அதிகமாகும்.

கடந்த ஆண்டில், இங்கிலாந்தில் உள்ள கவுன்சில்கள் தெரு பார்க்கிங் கட்டணங்கள் மூலம் £1.4 பில்லியனையும், கவுன்சில் நடத்தும் கார் பார்க்கிங் மூலம் £876 மில்லியனையும் ஈட்டியுள்ளதாக அதிகாரப்பூர்வ தரவுகள் காட்டுகின்றன.

அதாவது, இங்கிலாந்தில் சாலையில் செல்லும் ஒவ்வொரு காரும் சராசரியாக ஆண்டுக்கு £70 பார்க்கிங் கட்டணமாக செலுத்துகிறது. இருப்பினும் இதன் உண்மையான எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம்.

(Visited 3 times, 1 visits today)

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி