தென் அமெரிக்கா

மெக்சிகோவில் U.S எல்லை அருகே காணாமல் போன 5 இசைக்கலைஞர்கள் சடலம் மீட்பு ; கார்டெல் உறுப்பினர்கள் கைது

வட அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு மெக்சிகோ. இந்நாட்டில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இந்த கடத்தல் கும்பல்களுக்கு இடையே அவ்வப்போது பயங்கர மோதல் சம்பவங்கள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் நிகழ்கின்றன.

இதனிடையே, அந்நாட்டின் தம்லிபாஸ் மாகாணத்தை சேர்ந்த இசைக்கலைஞர்கள் 5 பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இசை நிகழ்ச்சியில் பங்கேற்க ம் ரெனொசா நகருக்கு சென்றுள்ளனர்.

அப்போது, அந்த இசைக்கலைஞர்கள் 5 பேரையும் போதைப்பொருள் கடத்தல் கும்பல் கடத்திச்சென்றது. இந்த சம்பவம் குறித்து கடத்தப்பட்ட இசைக்கலைஞர்களின் குடும்பத்தினர் பொலிஸில் புகார் அளித்தனர்.

இந்நிலையில், இந்த புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர தேடுதல் வேட்டைக்குப்பின் கடத்தப்பட்ட இசைக்கலைஞர்கள் 5 பேரையும் கடந்த வியாழக்கிழமை சடலமாக கண்டுபிடித்துள்ளனர். போதைப்பொருள் கடத்தல் கும்பல் இசைக்கலைஞர்கள் 5 பேரையும் கடத்தி அவர்களை கொன்று உடலை வனப்பகுதியில் வீசிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். போதைப்பொருள் கடத்தல் கும்பல்களை புகழ்ந்து இசைக்கலைஞர்கள் நிகழ்ச்சிகளை நடத்துவதாகவும், இது கடத்தல் கும்பல்களுக்கு இடையேயான மோதலை தூண்டி இதுபோன்ற கொலை சம்பவங்களை நடைபெறுவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

(Visited 3 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

தமிழ்நாடு தென் அமெரிக்கா

3D அனிமேஷன் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் சார்ந்த துறைகளில் கடல் போல வாய்ப்புகள்

மாயா அகாடமி ஆஃப் அட்வான்ஸ்டு சினிமாட்டிக்ஸ் எனும் மாக்  (MAAC) கோவையில்  நவீன 3D அனிமேஷன் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் குறித்து இளம் தலைமுறை மாணவ,மாணவிகளுக்குபயிற்சி அளித்து
தென் அமெரிக்கா

அவள் என் காதலி.. 800 வருடங்கள் பழமையான மம்மியோடு பொலிஸில் சிக்கிய 26 வயது இளைஞன்!

பெரு நாட்டில் 800 வருடப் பழமையான மம்மியை உணவு வழங்கப்பயன்படும் பையில் வைத்து, எடுத்துச் செல்லும் போது காவல்துறையிடம் நபர் ஒருவர் சிக்கியுள்ளார். பெரு நாட்டை சேர்ந்த