இலங்கை

ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை!

ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவா இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வரவுள்ளார். அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் அவர் நாட்டுக்கு வருகை தருவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது இந்த விஜயத்தின் போது அவர் கொழும்பு துறைமுகத்துக்கான கண்காணிப்பு விஜயமொன்றையும் மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோரை அவர் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இருதரப்பு கடன் மறுசீரமைப்பு தொடர்பான இறுதி […]

ஆசியா

லெபனானுடன் போரை தீவிரப்படுத்தும் இஸ்ரேல் : போராளிகள் பலர் பலி!

லெபனானின் பெக்கா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், லெபனான் போராளிக் குழுவைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டதாக அந்தக் குழு தெரிவித்துள்ளது. “லெபனானில் உள்ள மெய்டவுன் பகுதியில் மொசாப் கலாப்பைத் தாக்கி அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. விமானப்படை “லெபனானில் உள்ள மெய்டவுன் பகுதியில் மொசாப் கலாப்பைத் தாக்கி அழித்துவிட்டது” என்று இஸ்ரேலின் இராணுவம் வெள்ளிக்கிழமை ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அவர் ஜமா இஸ்லாமியா குழுவின் உறுப்பினர் என்றும் இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஜமா இஸ்லாமியா ஒரு […]

இந்தியா

டெல்லி – மகளுடன் பழக எதிர்ப்பு தெரிவித்த தாய்… சுட்டுக்கொலை செய்த சிறுவன்!

  • April 27, 2024
  • 0 Comments

டெல்லியில் மகளுடன் பழக எதிர்ப்பு தெரிவித்ததால் தாயை சிறுவன் சுட்டுக் கொன்ற அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. வடமேற்கு டெல்லியின் ஜஹாங்கீர்புரி பகுதியில் நேற்று இளம்பெண் ஒருவரை சிறுவன் சுட்டுக் கொன்றான். இந்த சம்பவத்தில் தொடர்புடைய சிறுவன் மற்றும் அவனது இரண்டு நண்பர்கள் தலைமறைவாகி உள்ளனர். அவர்களைப் பிடிக்க பொலிஸார் தனிப்படை அமைத்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் குறித்து பொலிஸார் தரப்பில் கூறுகையில், “சிறுவன் கொல்லப்பட்ட பெண்ணின் மகளுடன் பழகி வந்துள்ளான். இதற்கு பெண்ணின் தாய் எதிர்ப்பு தெரிவித்ததால் […]

இலங்கை

160 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் சந்தேக நபர் ஒருவர் கைது

  • April 27, 2024
  • 0 Comments

மஹரகம – நாவின்ன பிரதேசத்தில் 8 கிலோ ஹெரோயின் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் பெறுமதி சுமார் 160 மில்லியன் ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது. 45 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வட அமெரிக்கா

கலிபோர்னியாவில் இடம்பெற்ற விபத்தில் கேரளாவை சேர்ந்த குடும்பத்தினர் பலி !

  • April 27, 2024
  • 0 Comments

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் தருண் ஜார்ஜ். இவர் ஐக்கிய அமெரிக்கா நாட்டின் கலிபோர்னியாவில் பணியாற்றி வருகிறார். அவர் அங்கேயே தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று தருண்ராஜ் தனது மனைவி மற்றும் மகன்களுடன் காரில் சென்றார். கலிபோர்னியாவில் பிளசன்டன் பகுதியில் ஸ்டோனிரிட்ஜ் டிரைவ் புட்ஹில் சாலையில் சென்றுகொண்டிருந்த போது அவர்களது கார் விபத்தில் சிக்கியது. இதில் அவர்களது கார் முற்றிலுமாக நொறுங்கியது. காரின் இடிபாடுகளில் சிக்கி தருண் ஜார்ஜ், […]

இலங்கை

இலங்கையில் பொலிஸார் கண்முன்னே பெண்ணை கூரிய ஆயுதங்களால் தாக்கிய காடையர்கள் குழு!

  • April 27, 2024
  • 0 Comments

களுத்துறை நாகொட வைத்தியசாலையின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருக்கும் போதே வைத்தியசாலைக்கு வந்த பெண் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. களுத்துறை வெனிவெல்பிட்டிய பிரதேசத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட கும்பல் ஒன்றினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.நேற்று (25 )பிற்பகல் களுத்துறை வெனிவெல்பிட்டிய வெந்தேசி தோட்டம் பகுதியில் உள்ள வீடொன்றுக்கு சிலர் வந்து அங்கிருந்த இளைஞர் ஒருவரை தாக்கி வீட்டின் சொத்துக்களுக்கும் சேதம் விளைவித்துள்ளனர்.அப்பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு […]

பொழுதுபோக்கு

ப்பா.. என்ன நடிப்புடா சாமி.. கவின் நடித்துள்ள ’ஸ்டார்’ டிரெய்லரை பாருங்க…

  • April 27, 2024
  • 0 Comments

ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா வில்சன் நடிப்பில் உருவான பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இயக்கத்தில் கவின், லால், பிரீத்தி முகுந்தன் மற்றும் அதிதி போஹங்கர் நடித்துள்ள ஸ்டார் திரைப்படம் வரும் மே 10 ஆம் தேதி வெளியாகிறது. யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இந்நிலையில் தற்போது படத்தின் அட்டகாசமான டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு இதுவரை வெளியேயான படங்களின் டிரெய்லர் கூட […]

ஐரோப்பா

இங்கிலாந்தில் சீனாவுக்காக உளவுபார்த்த குற்றச்சாட்டில் இருவர் கைது

  • April 27, 2024
  • 0 Comments

இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் முன்னாள் ஆய்வாளர் கிறிஸ்டோபர் கேஷ் ( 29). இவர் தனது நண்பர் கிறிஸ்டோபர் பெர்ரியுடன் (32) இணைந்து நாட்டின் பாதுகாப்பு தொடர்பான ஆவணங்களை சீனாவுக்கு வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்டது. இதனையடுத்து சீனாவுக்கு உளவுபார்த்த குற்றச்சாட்டின்கீழ் அவர்களை பொலிஸார் கைது செய்தனர். இந்தநிலையில் அவர்கள் இருவரும் நேற்று லண்டன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை விசாரித்த கோர்ட்டு இருவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அதேசமயம் அவர்கள் இருவரும் நாடாளுமன்றத்துக்குள் நுழைவதற்கும், நாட்டை விட்டு வெளியேறுவதற்கும் கோர்ட்டு தடை விதித்துள்ளது.

செய்தி

தோனி பெயரில் மோசடி செய்ய முயற்சி! மக்களுக்கு எச்சரிக்கை

  • April 27, 2024
  • 0 Comments

சமூகத்தளத்தில் தோனியின் பெயரை பயன்படுத்தி ரூ.600 வரை மோசடி செய்ய முயற்சி. இன்றைய நாட்களில் வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம், X தளம் என்ற டிஜிட்டல் தளங்களில் பல மோசடிகள் நடைபெற்று வருகிறது. இதில் பலர் சிக்குவதும் உண்டு, பலர் இன்னும் வரை சிக்காமல் வாழ்ந்து வருகின்றனர். இதை எதிர்த்து பல கண்டனங்களும், எச்சரிக்கைகளும் வந்தாலும் ஒரு பக்கம் இது போன்ற மோசடிகள் நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில், நேற்று ஒரு மர்ம நபர் இவர் ஒருவர் தோனியின் புகைப்படம் […]

செய்தி முக்கிய செய்திகள்

7 நாடுகளுக்கு இலவச விசா வழங்க இலங்கை!

  • April 27, 2024
  • 0 Comments

7 நாடுகளுக்கு இலவச விசா வழங்க, அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளதாக சுற்றுலா, காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்று நாடாளுமன்றத்தில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்படி இந்தியா, இந்தோனேசியா, ரஷ்யா, சீனா, தாய்லாந்து உள்ளிட்ட 7 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்கப்படவுள்ளது. மேலும் 60 நாடுகளுக்கு இலவச விசா வழங்குவதற்கான தீர்மானத்தை மேற்கொள்ள குழுவொன்று […]

You cannot copy content of this page

Skip to content