இலங்கை

வவுனியாவில் வீடொன்றில் இருந்து மீட்கப்பட்ட யுவதி ஒருவரின் சடலம்!

  • March 28, 2024
  • 0 Comments

வவுனியா, சமனங்குளம் பகுதியில் இருந்து 23 வயது யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக சிதம்பரபுரம் பொலிஸார் இன்று (28) தெரிவித்தனர். வவுனியா, சமனங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இளம் யுவதி ஒருவர் தூக்கிட்ட நிலையில் காணப்படுவதாக சிதம்பரபுரம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற பொலிஸார் குறித்த யுவதியின் சடலத்தை மீட்டுள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவர் ஆசிகுளம், சிதம்பரநகர் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஜெகநாதன் கவிப்பிரியா என்பவராவார். சம்பவம் தொடர்பில் சிதம்பரபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு […]

பொழுதுபோக்கு

தனுஷ் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ்? எந்த படத்துலனு தெரியுமா?

  • March 28, 2024
  • 0 Comments

தனுஷ் நடிப்பில் கடைசியாக கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியானது. இதையடுத்து தனது 50ஆவது படமான ராயன் படத்தை இயக்கியிருக்கும் அவர் அடுத்ததாக சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா என்ற படத்தில் நடித்துவருகிறார். இதற்கிடையே நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தையும் இயக்கவிருக்கிறார் தனுஷ். இந்தச் சூழலில் அந்தப் படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. இதில் தனுஷின் உறவினர் வருண் என்பவர் ஹீரோவாக நடிக்க; அனிகா சுரேந்திரன் ஹீரோயினாக நடிக்கிறார். படத்தின் போஸ்டரும் […]

இலங்கை

இலங்கையில் தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

  • March 28, 2024
  • 0 Comments

களுத்துறை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவர்கள் குழுவொன்று தடுப்பு மருந்து செலுத்தப்பட்டதன் பின்னர் ஏற்பட்ட சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 10 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நாகொட வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 12 மற்றும் 13 வயதுடைய பாடசாலை மாணவர்கள் குழுவொன்றே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மயக்கம் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை

தங்குமிட விடுதி ஒன்றில் பெண்ணுடன் இருந்த பிக்கு கைது!!

  • March 28, 2024
  • 0 Comments

தங்குமிட விடுதியில் பெண்ணொருவருடன் இருந்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தியத்தலாவ பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் பெண்ணொருவருடன் இருந்த பிக்குவே தியத்தலாவ பொலிஸ் குழுவினால் விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளார். அந்த பிக்கு, பொரலந்த பிரதேசத்தில் உள்ள ஒரு விகாரையைச் சேர்ந்த 45 வயதானவர் என்றும், அந்தப் பெண் அதே பகுதியில் வசிக்கும் திருமணமான நாற்பது வயதான பெண்ணாவர். பெண்ணொருவர் மாற்றுப்பெயருடன் விடுதிக்கு வந்துள்ளதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து இந்த சுற்றிவளைப்பு நடத்தப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை

இலங்கையின் பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

  • March 28, 2024
  • 0 Comments

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையில் இலங்கையின் பணவீக்கம் மார்ச் மாதத்தில் குறிப்பிடத்தக்க வகையில் 0.9 வீதமாகக் குறைந்துள்ளது. இது முந்தைய மாதத்தில் 5.9 சதவீதமாக பதிவாகியிருந்தது. இருப்பினும், உணவுப் பணவீக்கம் பிப்ரவரியில் 3.5 சதவீதத்தில் இருந்து 3.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. பிப்ரவரியில் 7 சதவீதமாக இருந்த உணவு அல்லாத வகை பணவீக்கம் மார்ச் மாதத்தில் மைனஸ் 0.5 சதவீதமாக குறைந்ததே மார்ச் மாதத்தில் பணவீக்கம் குறைந்ததற்கு காரணம்.

இலங்கை

இலங்கையில் ஷாப்பிங் பைகளுக்கு பணம் அறவிடுவதை தடை செய்யும் வர்த்தமானி மீள பெறப்பட்டது!

  • March 28, 2024
  • 0 Comments

கடைகளில் பொருட்களை கொள்வனவு செய்யும் போது வழங்கப்படும் ஷாப்பிங் பைகளுக்கு பணம் அறவிடுவதை தடை செய்து நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெறுவதாக சட்டமா அதிபர் இன்று (28) உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். குறித்த வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி சுற்றாடல் நீதி மய்யத்தினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரசாங்கத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரல்  அவந்தி […]

இலங்கை

தேங்காய் பால் ஏற்றுமதி : பெப்ரவரியில் மில்லியன் ரூபா வருமானம்

2024 பெப்ரவரி மாதம் தேங்காய் பால் ஏற்றுமதி மூலம் 2971 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் மாதாந்த அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள ஏற்றுமதி அறிக்கையின்படி, 2024 பெப்ரவரியில் 6,739 மெற்றிக் தொன் தேங்காய்ப்பால் ஏற்றுமதியின் மூலம் கிடைத்த வருமானம் ரூ. 2,971 மில்லியன். 2023 பெப்ரவரி மாதம் 4366 மெற்றிக் தொன் தேங்காய்ப்பால் ஏற்றுமதி செய்யப்பட்டு 2401 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டதாகவும் தென்னை அபிவிருத்தி அதிகார […]

ஐரோப்பா

அமெரிக்க இராணுவ கேடட்களின் இசை நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு : க்ரீஸில் வெடித்த போராட்டம்!

  • March 28, 2024
  • 0 Comments

அமெரிக்க இராணுவ கேடட்களின் கச்சேரியை தடுக்க முயன்ற கம்யூனிஸ்ட் ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், போராட்டகாரர்களுக்கும் இடையில் மோதல் வெடித்துள்ளது. தற்போது கிரீஸிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க ராணுவ அகாடமியின் இசைக் குழுவான வெஸ்ட் பாயிண்ட் க்ளீ கிளப் உறுப்பினர்களின் இசை நிகழ்ச்சிக்கு முன்னதாக மத்திய கிரேக்க நகரமான லாரிசாவில் வன்முறைப் போராட்டம் இடம்பெற்றுள்ளது. இந்த போராட்டமானது உக்ரைனுக்கான இராணுவ ஆதரவு, செங்கடல் பதற்றம், கிரீஸில் அமெரிக்க துருப்புக்கள் இருப்பதை எதிர்த்து முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த போராட்டத்தை கலைக்க பொலிஸார் […]

ஆசியா

தென்கொரியா- சியோங்னாம் நகரின் சாலையில் அங்கும் இங்கும் ஓடி திரிந்த ராட்சத நெருப்புக்கோழி !

  • March 28, 2024
  • 0 Comments

வன விலங்குகள், பறவைகளை பூங்காக்களில் கூண்டுக்குள் பார்க்கும் பார்வையாளர்கள் பரவசப்படுவார்கள். அதே நேரம் அவை ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் போது ஆபத்தாக மாறிவிடும். அந்த வகையில் நெருப்புக்கோழி ஒன்று சாலைகளில் ஓடிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் தென்கொரியாவின் சியோங்னாம் நகரில் நடைபெற்றுள்ளது. சம்பவத்தன்று காலை அந்த பகுதியில் சாலைகளில் அங்கும், இங்குமாக ஓடிய ராட்சத நெருப்புக்கோழி திடீரென சுரங்க பாதை பகுதிக்குள் புகுந்தது. தடோரி பகுதியில் சுற்றுச்சூழல் பூங்காவில் இருந்து தப்பிய […]

இலங்கை

மட்டக்களப்பில் விபத்தில் சிக்கிய O/L பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள்- ஒருவர் பலி, ஒருவர் படுகாயம்!

  • March 28, 2024
  • 0 Comments

பெற்றோரின் அசமந்த போக்கு மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்படும் அதீத சுதந்திரம் காரணமாக இளம்வயதிலேயே உயிரிழக்கும் சம்பவங்கள் இந்த நாட்டில் அதிகரித்துவருகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்து ஒன்றில் இம்முறை சாதாரண பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்று இரவு பெரியகல்லாறு மயான வீதியில் குறித்த இரு மாணவர்களும் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்ற நிலையில் வேகத்தினை கட்டுப்படுத்தமுடியாது மின்சார தூணில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக […]

You cannot copy content of this page

Skip to content