பாகிஸ்தானில் பாதுகாப்பு படைகளின் தலைமையத்திற்கு வெளியில் குண்டுவெடிப்பு!
பாகிஸ்தானின் துணை ராணுவப் பாதுகாப்புப் படைகளின் தலைமையகத்திற்கு வெளியே கார்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் குறைந்தது எட்டு பேர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
குறித்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு முன்னதாக தாக்குதல் தாரிகள் துப்பாக்கி பிரயோகத்தையும் மேற்கொண்டுள்ளனர்.
குண்டுவெடிப்பு மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்ததாகவும், அது மைல்களுக்கு அப்பால் இருந்து கேட்டதாகவும் குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை சம்பவ இடத்திற்கு வருகை தந்த ஆம்புலன்ஸ் சேவைகள் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துமவனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
தாக்குதலுக்கு எந்த படையும் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும் பிரிவினைவாதக் குழுக்கள் மீது சந்தேகம் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
(Visited 5 times, 1 visits today)





