பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற பாஜக வேட்பாளர்
துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் முன்னணி வீராங்கனை ஷ்ரேயாசி சிங் பாரீஸ் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளார்.
இவர் 2018-ம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றார். 2014 ஆசிய போட்டியில் வெண்கல பதக்கம் வென்றார். தற்போது 21 பேர் கொண்ட துப்பாக்கிச்சுடுதல் குழுவுடன் பாரிஸ் செல்ல இருக்கிறார்.
ஒலிம்பிக்கில் விளையாடி நாட்டிற்கு தங்கம் வெல்ல வேண்டும் என்பது என்னுடைய தந்தையின் கனவு. தற்போது தந்தைக்காக நான் தங்கம் வென்று அவரது கனவை நிறைவேற்ற முயற்சி செய்வேன் எனத் தெரிவித்துள்ளார்.
பெண்கள் மற்றும் ஆண்கள் என இரண்டு பிரிவுகளில் கலந்து கொள்ளும் முதல் நபர் நான். பீகாரில் இருந்து துப்பாக்கிச்சுடுதல் அணியில் ஒலிம்பிக் போட்டியில் கலந்த கொள்ள தகுதி பெற்றுள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், ஒலிம்பிக் போட்டியில் நாட்டிற்காக கலந்து கொள்வதை மிகப்பெரிய கவுரவமாக நினைக்கிறேன். இன்று காலை 11 மணிக்கு தேசிய ரைபிள் சங்கத்திடம் இருந்து தகுதி பெற்ற செய்தியை பெற்றேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இவர் பீகார் மாநிலம் ஜமுய் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக உள்ளார். இவர் முன்னாள் மத்திய மந்திரி திக்விஜய் சிங்கின் மகள் ஆவார். இவருக்கு 32 வயதாகிறது.