வங்கதேசத்தின் நிலவும் அரசியல் பிரச்சினை மோதலாக உருவெடுத்துள்ளது!
																																		பல வாரங்களாக வங்கதேசத்தில் நிலவி வந்த சூடான அரசியல் சூழல் தற்போது மோதல்களாக உருவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எனவே எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கு முன்னர் நாட்டில் அரசியல் நெருக்கடி உருவாகி வருவதாகத் தோன்றுவதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பல பிரதான எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் கைது செய்யப்பட்டனர் மற்றும் சனிக்கிழமையன்று அரசாங்கத்திற்கு எதிரான அரசியல் பேரணி மோதலில் முடிந்தது. இரண்டு எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் இதன்போது உயிரிழந்தனர்.
நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவி விலகக் கோரி பிரதான எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியக் கட்சி தனது போராட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளது.
பிரதமரின் ஆட்சியில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை எதிர்பார்க்க முடியாது என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. ஆனால் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கோரிக்கையை நிராகரிக்கிறது.
        



                        
                            
