வங்கதேச மாணவர் எழுச்சித் தலைவர் சிங்கப்பூர் மருத்துவமனையில் மரணம்
வங்காளதேசத்தில்(Bangladesh) 2024ம் ஆண்டு நடைபெற்ற மாணவர் தலைமையிலான எழுச்சியின் தலைவரான ஷெரிப் ஒஸ்மான் பின் ஹாடி(Sharif Osman bin Hadi), ஒரு கொலை முயற்சியில் காயமடைந்து சிங்கப்பூரில்(Singapore) சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
“மருத்துவர்களின் சிறந்த முயற்சிகள் இருந்தபோதிலும் ஹாடி உயிரிழந்துவிட்டார்” என்று சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வங்காளதேச நாளிதழான டாக்கா ட்ரிப்யூனின்(Dhaka Tribune) அறிக்கையின்படி, அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நாட்டின் தேசியத் தேர்தலில் வேட்பாளராகக் கருதப்பட்ட ஹாடி, டிசம்பர் 12 அன்று தலைநகர் டாக்காவில் துப்பாக்கி சூட்டுக்கு ஆளானார்.
இதனை தொடர்ந்து ஹாடி சிகிச்சைக்காக டாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக வங்காளதேசத்திலிருந்து சிங்கப்பூர் பொது மருத்துவமனை(SGH) நரம்பியல் அறுவை சிகிச்சை தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டார்.
32 வயதான ஹாடி, மாணவர் போராட்டக் குழுவான இன்கிலாப் மஞ்சாவின்(Inquilab Manja) மூத்த தலைவராக இருந்தார், மேலும் முன்னாள் வங்காளதேசப் பிரதமர் ஷேக் ஹசீனாவின்(Sheikh Hasina) பழைய நண்பரும் ஆவார்.





