தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக ஆஸ்திரேலிய பிரதமர் குற்றச்சாட்டு
குற்றம் சாட்டப்பட்ட டீனேஜ் பயங்கரவாதி ஒருவரால் தனக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக ஆஸ்திரேலியாவின் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.
19 வயதான ஜோர்டான் பாட்டன்,ஆளும் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொல்லும் தனது நோக்கத்தை கோடிட்டுக் காட்டியதாகக் கூறப்படும் தீவிரவாத அறிக்கையில் அச்சுறுத்தப்பட்டவர்களில் அவரும் அவரது குடும்பத்தினரும் இருப்பதாக அல்பானீஸ் தெரிவித்தார்.
“ஆஸ்திரேலியாவில் தீவிரவாதத்திற்கு இடமில்லை. அந்த ஆவணங்கள் தொழிலாளர் கட்சி எம்.பி.க்களுக்கு மட்டுமல்ல, மற்றவர்களுக்கும், எனது குடும்பத்திற்கும் அச்சுறுத்தல்கள் உட்பட மிகவும் கவலையளிக்கிறது,” என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சிட்னிக்கு வடக்கே 100 கிமீ தொலைவில் உள்ள நியூகேஸில் நகரில் பயங்கரவாத எதிர்ப்புக் குழுவால் (JCTT), நியூ சவுத் வேல்ஸ் மாநில நாடாளுமன்றத்தில் தொழிற்கட்சி எம்பியான டிம் க்ரகந்தோர்ப் அலுவலகத்தில் ஆயுதங்களுடன் நுழைந்ததாகக் கூறப்படும் பாட்டன் கைது செய்யப்பட்டார்.
அவர் ஒரு பயங்கரவாதச் செயலுக்குத் தயார் செய்ததாக அல்லது திட்டமிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.