ஆஸ்திரேலியாவில் இருந்து குற்றவாளிகளை நவ்ருவுக்கு நாடு கடத்த நடவடிக்கை

ஆஸ்திரேலியா அரசாங்கம் அந்த நாட்டின் நூற்றுக்கணக்கான வெளிநாட்டில பிறந்த குற்றவாளிகளை நவ்ருவிற்கு நாடு கடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
பசிபிக் தீவு நாடான நவ்ருவுடன் 400 மில்லியன் டொலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு, அத்தகைய குற்றவாளிகள் நவ்ருவுக்கு நாடு கடத்தப்படவுள்ளனர்.
நவ்ரு ஜனாதிபதி டேவிட் அடியாங் மற்றும் அவரது அமைச்சரவை, NZYQ குழு உறுப்பினர்களை நாடுகடத்துவதற்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டதாக உள்துறை அமைச்சர் டோனி பர்க் தெரிவித்துள்ளார்.
NZYQ குழு என்பது 350 வெளிநாட்டில் பிறந்த குற்றவாளிகளைக் கொண்ட குழுவாகும். அவர்களுக்கு, 2023 நவம்பர் மாதத்தில், உயர் நீதிமன்றம் “குடிமக்கள் அல்லாதவர்களை நாடுகடத்துவதற்கான திட்டம் இல்லாமல் காலவரையின்றி தடுத்து வைப்பது அரசியலமைப்பிற்கு முரணானது” என்று முடிவெடுத்திருந்தது.
இந்தக் குழுவில் கொலையாளிகள் மற்றும் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்பவர்கள் உள்ளனர், மற்றும் அவர்கள் சொந்த நாடுகளுக்கு நாடு கடத்தப்பட மறுத்த பிறகு, சமூகத்தில் விடுவிக்கப்பட்டனர்.
டோனி பர்க் ஒருமுறை கூறியபடி, “செல்லுபடியாகும் விசா இல்லாத எவரும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்” என்று, நவ்ரு ஒப்பந்தத்தில் நீண்டகால வதிவிடம் வழங்குவதாக கூறப்பட்டுள்ளது.
NZYQ குழுவின் அனைத்து கைதிகளுக்கும் இது தொடர்ந்தும் பொருந்தும். மேலும், மீள்குடியேற்றத்திற்கு தேவையான $70 மில்லியன் ஆண்டுதோறும் ஆஸ்திரேலியா செலுத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த ஒப்பந்தத்தை பசுமைக் கட்சி மற்றும் மனித உரிமைகள் குழுக்கள் கண்டித்துள்ளன. அவர்கள் இதை ஒரு அட்டூழியமாகும் என்று கூறுகின்றனர்.