ரஷ்யாவில் கிறிஸ்தவ வழிபாட்டுத் தலங்களில் தாக்குதல் – பலர் பலி

ரஷ்யாவின் தாகெஸ்தான் பகுதியில் உள்ள கிறித்துவ ஜெய வழிபாட்டுத் தலங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தாக்குதலில் 7 பொலிஸார் ஒரு பாதிரியார் உள்பட 15 பேர் உயிரிழந்தனர். மேலும் 25க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
இருவேறு நகரங்களில் ஒரே நேரத்தில் துப்பாக்கி ஏந்திய நபர்கள் வழிபாட்டுத் தலங்களில் இத்தாக்குதலை நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஒரு தேவாலயத்திற்கும் தீவிரவாதிகள் தீ வைத்தனர். பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சண்டையில் நான்கு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
(Visited 36 times, 1 visits today)