இலங்கை

ஸ்ரீலங்கன் விமானத்தில் பணிப்பெண்கள் மீது தாக்குதல் ;வெளிநாட்டவர் ஒருவர் கைது

சவூதி அரேபியாவின் ரியாத்தில்(Riyadh) இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த ஸ்ரீலங்கன்(SriLankan Airlines) விமானத்தில் விமான பணிப்பெண்களைத் தாக்கிய பயணி ஒருவர் இன்று (26) கைது செய்யப்பட்டுள்ளார்.

28 வயதான சவூதி அரேபிய பயணி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.இவர், சவூதி அரேபியாவின் ரியாத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக மலேசியாவுக்குச் செல்வதற்காக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் UL-266இல் பயணித்துள்ளார்.

விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கத் தயாராகிக் கொண்டிருந்தபோது, ​​விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் தங்கள் இருக்கை பெல்ட்களைக்(Belt) கட்டிக்கொண்டு இருக்கைகளில் அமர வேண்டியிருந்தது.

எனினும், இந்த பயணி மட்டும் அந்த விதியை மீறி கழிப்பறைக்குச் செல்ல முயன்றார்.பணிப்பெண்கள் இவரை தடுக்க முற்பட்ட போது மோதல் ஏற்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் நடத்திய ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.

விமான ஊழியர்கள் சம்பவம் குறித்து விமானிக்கு தகவல் அளித்ததை அடுத்து, விமானம் தரையிறங்கியதும் காவல்துறை அதிகாரிகள் சந்தேகநபரை கைது செய்தனர்.

இந்த சம்பவம் இலங்கை வான்வெளியில் நடந்ததால், சந்தேகத்திற்குரிய சவூதி அரேபிய பிரஜை நாளை (27) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!