UKவில் பாலியல் குற்றச்சாட்டை எதிர்நோக்கும் புகலிடக் கோரிக்கையாளருக்கு 09 ஆண்டுகள் சிறை!
பிரித்தானியாவில் பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய புகலிடக் கோரிக்கையாளர் ஒருவருக்கு 09 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி எரித்திரிய நாட்டு (Eritrean) புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர், மார்கேட் (Margate) கடற்கரையில் தனியாக நடந்து சென்ற பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அமர் முகமது என அறியப்படும் சந்தேகநபர் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு நேற்று கேன்டர்பரி கிரவுன் நீதிமன்றத்தில் (Canterbury Crown Court) முன்னிலைப்படுத்தப்பட்டார்.
பத்து நாட்கள் நீடித்த விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்தின் நடுவர் மன்றம், அவரை குற்றவாளியாக அறிவித்தது.
இதனைத் தொர்ந்து அவருக்கு 09 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.





