விளையாட்டு

ஆசிய கோப்பை டி20 தொடர் இன்று ஆரம்பம்

ஆசிய கோப்பை டி20 கிரிக்​கெட் தொடர் ஐக்​கிய அரபு அமீரகத்​தில் இன்று (9-ம் தேதி) தொடங்​கு​கிறது. வரும் 28-ம் தேதி வரை நடை​பெறும் இந்​தத் தொடரில் 8 அணி​கள் கலந்து கொள்​கின்​றன. ‘ஏ’ பிரி​வில் இந்​தி​யா, பாகிஸ்​தான், ஓமன், ஐக்​கிய அரபு அமீரகம் அணி​கள் இடம் பெற்​றுள்​ளன. ‘பி’ பிரி​வில் இலங்​கை, வங்​கதேசம், ஆப்​கானிஸ்​தான், ஹாங் காங் ஆகிய அணி​கள் உள்​ளன.

லீக் சுற்​றில் ஒவ்​வொரு அணி​யும் தனது பிரி​வில் உள்ள மற்ற அணி​களு​டன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்​றின் முடி​வில் இரு பிரி​விலும் முதல் 2 இடங்​களை பிடிக்​கும் அணி​கள் சூப்​பர் 4 சுற்​றுக்கு முன்​னேறும். இந்த சுற்​றில் 4 அணி​களும் தங்​களுக்​குள் தலா ஒருமுறை மோதும். இதில் முதல் 2 இடங்​களை பிடிக்​கும் அணி​கள் இறு​திப் போட்​டிக்கு முன்​னேறும். சூப்​பர் 4 சுற்று 20-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை நடை​பெறுகிறது. சாம்​பியன் பட்​டம் வெல்​வது யார் என்​பதை தீர்​மானிக்​கும் இறு​திப் போட்டி 28-ம் தேதி நடை​பெறுகிறது. தொடரின் அனைத்து ஆட்​டங்​களும் துபாய், அபு​தாபி​யில் நடத்​தப்​படு​கிறது.

தொடக்க நாளான இன்று ‘ஏ’ பிரி​வில் இடம் பெற்​றுள்ள ஆப்​கானிஸ்​தான் – ஹாங் காங் அணி​கள் மோதுகின்​றன. இந்த ஆட்​டம் இந்​திய நேரப்​படி இரவு 8 அணிக்கு அபு​தாபி​யில் நடை​பெறுகிறது. சூர்​யகு​மார் யாதவ் தலை​மையி​லான இந்​திய அணி தனது முதல் ஆட்​டத்​தில் நாளை (10-ம் தேதி) ஐக்​கிய அரபு அமீரகத்​துடன் மோதுகிறது. இந்த ஆட்​டம் துபா​யில் நடை​பெறுகிறது. மிகுந்த எதிர்​பார்ப்பை ஏற்​படுத்தி உள்ள இந்​தியா – பாகிஸ்​தான் ஆட்​டம் வரும் 14-ம் தேதி நடை​பெறுகிறது.

டி 20 உலகக் கோப்பை தொடர் அடுத்த ஆண்டு பிப்​ர​வரி-​மார்ச் மாதங்​களில் இந்​தியா மற்​றும் இலங்​கை​யில் நடை​பெறுகிறது. இதனால் உலகக் கோப்பை தொடருக்​கான அணியை கட்​டமைக்​கும் வகை​யில் ஆசிய கோப்பை டி 20 தொடரை இந்​தி​யா, பாகிஸ்​தான், இலங்​கை, ஆப்​கானிஸ்​தான் உள்​ளிட்ட அணி​கள் பயன்​படுத்​திக் கொள்ள முயற்​சிக்​கக்​கூடும்.

ஆசிய கோப்பை தொடரில் இந்​திய அணி 8 முறை சாம்​பியன் பட்​டம் வென்​றுள்​ளது. இதில் 7 தொடர்​கள் 50 ஓவர்​கள் வடி​வில் நடத்​தப்​பட்​ட​வை. அதேவேளை​யில் 2016-ம் ஆண்டு இந்​தியா வென்ற தொடர் டி 20 வடி​வில் நடத்​தப்​பட்​டிருந்​தது. கடைசி​யாக 2023-ம் ஆண்டு நடத்​தப்​பட்ட ஆசிய கோப்பை தொடரில் இந்​தியா கோப்​பையை வென்​றிருந்​தது.

டி 20 உலகக் கோப்​பைக்கு முன்​ன​தாக இந்​திய அணி ஆசிய கோப்பை உட்பட 20, டி 20 ஆட்​டங்​களில் விளை​யாட உள்​ளது. இந்த ஆட்​டங்​களின் வாயி​லாக உலகக் கோப்பை தொடருக்​கான வலு​வான குழுவை உரு​வாக்க இந்​திய அணி முனைப்பு காட்​டக்​கூடும். சூர்​யகு​மார் யாதவ் தலை​மை​யில் இந்​திய அணி 80 சதவி​கித வெற்​றிகளை குவித்​துள்​ளது. தற்​போது அவருடன் துணை கேப்​ட​னாக ஷுப்​மன் கில்​லும் இணைந்​துள்​ளார். இது அணி​யின் வலிமையை அதி​கரிக்​கக்​கூடும்.

பாகிஸ்​தான் அணி சல்​மான் ஆகா தலை​மை​யிலும், இலங்கை அணி சரித் அசலங்கா தலை​மை​யிலும் களமிறங்​கு​கின்​றன. பாகிஸ்​தான் அணி​யில் பாபர் அஸம், முகமது ரிஸ்​வான் ஆகியோர் நீக்​கப்​பட்​டுள்​ளனர். ஐக்​கிய அரபு அமீரக ஆடு​களங்​கள் சுழற்​பந்து வீச்​சுக்கு கைகொடுக்​கும் என்​ப​தில் பாகிஸ்​தான் அணி​யில் உள்ள முகமது நவாஷ், அப்​ரார் அகமது, சுபி​யான் முகீம் உள்​ளிடோர் பலம் சேர்க்​கக்​கூடும். வேகப்​பந்து வீச்​சில் ஷாகின் ஷா அப்​ரிடி, ஹாரிஷ் ரவூப், ஹசன் அலி ஆகியோரை நம்பி களமிறங்​கு​கிறது பாகிஸ்​தான் அணி.

சரித் அசலங்கா தலை​மையி​லான இலங்கை அணி​யும் வலு​வாகவே திகழ்​கிறது. ஆனால் தொடர்ச்​சி​யாக 7 ஆட்​டங்​களில் வென்று தொடரை வெல்​லக்​கூடிய அளவி​லான நிலைத்​தன்மை அவர்​களிடம் உள்​ளதா என்​பது சந்​தேகம்​தான். அதே​போன்று வங்​கதேச அணி​யும் தொடர் முழு​வதும் சவாலைத் தாங்​கும் அளவுக்கு போது​மான பலம் கொண்​ட​தாக அமைய​வில்​லை.

‘பி’ பிரி​வில் ஆப்​கானிஸ்​தான் அணி சவால்​தரக்​கூடும். ரஷித் கான், நூர் அகமது ஆகியோ​ருடன் கசன்ஃபரும் சுழலில் பலம் சேர்க்​கக்​கூடிய​வ​ராக திகழ்​கிறார். ஓமன், ஐக்​கிய அரபு அமீரகம், ஹாங் காங் ஆகிய அணி​களுக்கு உலகத் தரம் வாய்​ந்​த அணி​களுடன் விளை​யாட உள்​ளது புதிய அனுபவத்​தை தரக்​கூடும்​.ஓமன்​, ஐக்​கிய அரபு அமீரகம்​ ஆகிய இரு அணி​களி​லும்​ இந்​தி​ய வம்​​சாவளியை சேர்​ந்​த தலா 6 வீரர்​கள்​ இடம்​ பெற்​றுள்​ளனர்​.

(Visited 2 times, 2 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ