Asia Cup M11 – ஆப்கானிஸ்தானை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறிய இலங்கை

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி அணி 06 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
அபுதாபியில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அந்த அணி 20 ஓவர்கள் நிறைவில்169 ஓட்டங்கள் குவித்தது.
துடுப்பாட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி சார்பில் நபி அதிரடியாக விளையாடி 60 ஓட்டங்கள் பெற்றுக்கொடுத்தார்.
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் துஷார 04 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
170 ஓட்ட இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 18.4 ஓவர்கள் நிறைவில் 04 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி பெற்றது.
இலங்கை அணி சார்பில் குஷால் மெண்டிஸ் 74 ஓட்டங்களும் கமிந்து மெண்டிஸ் 26 ஓட்டங்களும் பெற்றுக்கொடுத்தனர்.
இதன்படி ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் B குழுவில் இருந்து இலங்கை மற்றும் பங்களாதேஷ் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.