Asia Cup – இலங்கைக்கு எதிராக 202 ஓட்டங்கள் குவித்த இந்திய அணி

17வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்4 சுற்றில் இன்று நடந்து வரும் கடைசி லீக் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை ஆடி வருகிறது.
டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தெரிவு செய்தது. தொடர்ந்து இந்தியாவின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில் மற்றும் அபிஷேக் சர்மா களம் இறங்கினர்.
இதில் கில் 4 ஓட்டங்களுக்கும் அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 12 ஓட்டங்களுக்கும் அவுட் ஆகினர்.
மறுபுறம் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மா அரைசதம் அடித்து அசத்தினார். அவர் 61 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
அவரை தொடர்ந்து அதுக்காக அதிரடியாக விளையாடிய திலக் வர்மா 49 ஓட்டங்களும் சஞ்சு சாம்சன் 39 ஓட்டங்களும் பெற்று கொடுத்தனர்.
இறுதியில் இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 202 ஓட்டங்கள் குவித்தது.
இந்தியா அணி சார்பில் பந்து வீச்சில் தீக்க்ஷண, சமீரா, ஹசரங்க, அசலங்க, சானக ஆகியோர் தலா ஒரு விக்கெட்களை கைப்பற்றினர்.