Asia Cup – வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய அணி

17வது ஆசிய கோப்பை கிரிக்கெட் துபாய், அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆசிய கோப்பையில் சூப்பர் 4 சுற்றில் துபாயில் நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் வங்காளதேசம் மோதியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேசம் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ஓட்டங்கள் எடுத்தது.
இதையடுத்து, 169 ஓட்டங்கள்எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர்களாக சைப் ஹசன் மற்றும் டான்சித் ஹசன் தமீம் அதிரடியாக விளையாடினர். சைப் ஹசன் நிலைத்து நின்று அரைசதம் அடித்தார்.
இருப்பினும், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர். இறுதியில் 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வங்கதேச அணி 127 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்தியத் தரப்பில் குல்தீப் யாதவ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.