Asia Cup – சூப்பர் ஓவர் முறையில் இலங்கையை வீழ்த்திய இந்தியா

ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றின் கடைசி போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய செய்த இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 202 ஓட்டங்கள் குவித்தது. அபிஷேக் சர்மா 61 ஓட்டங்களும், திலக் வர்மா 49 ஓட்டங்களும், சஞ்சு சாம்சன் 39 ஓட்டங்களும் எடுத்தனர்.
இதையடுத்து, 203 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களமிறங்கியது. குசால் மெண்டிஸ் டக் அவுட்டானார்.
2வது விக்கெட்டுக்கு பதும் நிசங்காவுடன் குசால் பெராரா இணைந்தார். இந்த ஜோடி அதிரடியாக ஆடி ஓட்டங்களை குவித்தது, குசால் பெராரா அரை சதம் கடந்து 58 ஓட்டங்களுக்கு அவுட்டானார்.
சிறப்பாக ஆடிய பதும் நிசங்கா சதம் கடந்து 107 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இறுதியில், இலங்கை 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 202 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, சூப்பர் ஒவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. அதன்படி, முதலில் ஆடிய இலங்கை 5 பந்துகளில் 2 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து ஆடிய இந்தியா 3 ஓட்டங்கள் எடுத்து எளிதில் வெற்றி பெற்றது.