ஆஷஸ் தொடர் – இரண்டாம் நாள் முடிவில் 158 ஓட்டங்கள் பின்னிலையில் இங்கிலாந்து
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் பிரபல ஆஷஸ்(Ashes) தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.
அந்தவகையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி அடலெய்ட்(Adelaide) மைதானத்தில் ஆரம்பமானது.
போட்டியின் நாணய சுழற்சியை வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம் செய்தது.
இந்நிலையில், முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 91.2 ஓவர்களுக்கு சகல விக்கெட்களை இழந்து 371 ஓட்டங்களை பெற்றது.
ஆஸ்திரேலிய அணி சார்பில், அலெக்ஸ் கரே(Alex Carey) 106 ஓட்டங்களும் உஸ்மான் கவாஜா(Usman Khawaja) 82 ஓட்டங்களும் பெற்றனர்.
பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பில், ஜோப்ரா ஆர்ச்சர்(Jofra Archer) 5 விக்கெட்களை கைப்பற்றினார்.
இதனை தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை விளையாடி வரும் இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் முடிவில் 68 ஓவர்களுக்கு 8 விக்கெட்களை இழந்து 213 ஓட்டங்களை பெற்றுள்ளது.
இங்கிலாந்து அணி சார்பில், ஹரி புரூக்(Harry Brook) மற்றும் பென் ஸ்டோக்ஸ்(Ben Stokes) 45 ஓட்டங்களும் ஜோப்ரா ஆர்ச்சர்(Jofra Archer) 30 ஓட்டங்களும் பெற்றுள்ளனர்.
பந்து வீச்சில் ஆஸ்திரேலிய அணி சார்பில், பேட் கம்மின்ஸ்(Pat Cummins) 3 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.





