ஆஷஸ் தொடர் – இங்கிலாந்து அணிக்கு 435 ஓட்ட இலக்கை நிர்ணயித்த ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் பிரபல ஆஷஸ்(Ashes) தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.
அந்தவகையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி அடிலெய்ட்(Adelaide) மைதானத்தில் ஆரம்பமானது.
போட்டியின் நாணய சுழற்சியை வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம் செய்தது.
அந்த வகையில், முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 91.2 ஓவர்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்து 371 ஓட்டங்களை பெற்றது.
இதனை தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து அணி 87.2 ஓவர்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்து 286 ஓட்டங்களை பெற்றது.
பின்னர், 85 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 349 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்து 435 ஓட்ட இலக்கை நிர்ணயித்தது.
இந்நிலையில், இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி நான்காம் நாள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 207 ஓட்டங்களை பெற்றுள்ளது.
ஆகவே, இறுதி நாளில் இங்கிலாந்து வெற்றி பெற 228 ஓட்டங்கள் பெற வேண்டுயுள்ளது, அதேபோல் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 4 விக்கெட்கள் மட்டுமே கைப்பற்ற வேண்டும்.





