ஆஷஸ் தொடர் – இரண்டாம் நாள் முடிவில் 44 ஓட்டங்கள் முன்னிலையில் ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் பிரபல ஆஷஸ்(Ashes) தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.
அந்தவகையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி பிரிஸ்பேனில்(Brisbane) உள்ள கப்பா(Gabba) மைதானத்தில் ஆரம்பமானது.
அந்தவகையில், பகல் இரவு(Day&Night) போட்டியாக ஆரம்பான போட்டியின் நாணய சுழற்சியை இங்கிலாந்து அணி வென்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம் செய்தது.
இந்நிலையில், முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 76.2 ஓவர்களுக்கு சகல விக்கெட்களை இழந்து 334 ஓட்டங்களை பெற்றது.
இங்கிலாந்து அணி சார்பில் ஜாக் கிராலி(Zak Crawley) 76 ஓட்டங்களும் ஜோ ரூட்(Joe Root) 138 ஓட்டங்களும் இறுதியில் அதிரடியாக விளையாடி ஜோப்ரா ஆர்ச்சர்(Jofra Archer) 38 ஓட்டங்களும் குவித்தனர்.
அதனை தொடர்ந்து, தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த ஆஸ்திரேலிய அணி இரண்டாம் நாள் முடிவில் 73 ஓவர்களுக்கு 6 விக்கெட்களை இழந்து 378 ஓட்டங்களை பெற்றுள்ளது.
ஆஸ்திரேலிய அணி சார்பில் ஜேக் வெதரல்ட்(Jake Weatherald)
72 ஓட்டங்களும் மார்னஸ் லபுஷேன்(Marnus Labuschagne) 65 ஓட்டங்களும் ஸ்டீவ் ஸ்மித்(Steve Smith) 61 ஓட்டங்களும் பெற்றுள்ளனர்.
பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் பிரைடன் கார்ஸ்(Brydon Carse) 3 விக்கெட்களும் பென் ஸ்டோக்ஸ்(Ben Stokes) 2 விக்கெட்களும் கைப்பற்றியுள்ளனர்.
இறுதியில், இரண்டாம் நாள் முடிவில் இங்கிலாந்தை விட ஆஸ்திரேலிய அணி 44 ஓட்டங்கள் முன்னிலை வகிக்கிறது.





