அறிவியல் & தொழில்நுட்பம்

உலகையே மாற்றும் சக்தி கொண்ட செயற்கை நுண்ணறிவு – பிரித்தானிய பிரதமர் தகவல்

உலகையே மாற்றவல்லதாக artificial intelligence எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் காணப்படுவதாக பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் கூறியுள்ளார்.

லண்டனில் தொழில்நுட்ப வாரம் கருத்தரங்கில் உரை நிகழ்த்திய ரிஷி சுனக் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சுகாதாரம் உணவு போன்ற பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவு உலகை மாற்றும் என்று தெரிவித்துள்ளார். எந்த ஒரு நாட்டையும் உலகிற்கு தலைமை தாங்கச் செய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தொழில்நுட்பத்துறையின் வளர்ச்சி குறித்து வியப்பு அதிகரிப்பதாக கூறிய இங்கிலாந்து பிரதமர், அமெரிக்கா சீனாவை அடுத்து இங்கிலாந்து தொழில்நுட்ப வளர்ச்சியில் மூன்றாவது இடத்தில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

செயற்கை நுண்ணறிவால் பலர் வேலையை இழப்பது குறித்த அச்சம் கொண்டுள்ளனர் என்றும், அதனை தமது கவனத்தில் வைத்திருப்பதாகவும், ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

(Visited 32 times, 1 visits today)

SR

About Author

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில்
error: Content is protected !!