Site icon Tamil News

வடக்கில் தொல்பொருள் திணைக்களத்தின் கீழ் பணிபுரிய பெரும்பான்மை இனத்தவர்கள் நியமனம்

வடக்கு மாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களிலும் தொல்பொருள் திணைக்களத்தின்கீழ் பணியாற்றுவதற்காக நூற்றுக்கணக்கான பெரும்பான்மை இனத்தவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக நம்பகரமாக அறியமுடிகிறது.

ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.அதிலும் குறிப்பாக தொல்பொருள் திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவகத்தின் கீழ் பணியாற்ற 30 வரையான பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு நியமிக்கப்பட்டவர்கள் தொல்பொருள் மையங்களில் தங்க தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

வடக்கு மாகாணத்தில் உள்ள இளைஞர்கள் யுவதிகள், பட்டதாரிகள் வேலைவாய்ப்பு இல்லாது இருக்கும் போது இவ்வாறான வேலைவாய்ப்புக்களை பெரும்பான்மை இனத்தவர்களுக்கு வழங்கியுள்ள விடயம் தற்போது அம்பலமாகியுள்ளது.

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை என வடக்கு கிழக்கெங்கும் தொல்லியல் திணைக்களத்தின் ஆக்கிரமிப்புகள் தொடர்பாக பாரிய சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில் இவ்வாறு வடபகுதியை சேர்ந்தவர்கள் புறக்கணிக்கப்பட்டு பெரும்பான்மை இனத்தவர் நியமிக்கப்பட்டுள்ள விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version