பிலிப்பைன்ஸை தாக்கிய மற்றொரு சூறாவளி – நால்வர் பலி, பலர் இடப்பெயர்வு!
பிலிப்பைன்ஸை தாக்கிய மற்றொரு புயலின் காரணமாக நால்வர் உயிரிழந்துள்ளதுடன் எராளமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
ஆசியாவை அச்சுறுத்தும் பசிபிக் பெருங்கடலில் இருந்து அடுத்தடுத்து வந்த புயல்களினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
ரகாசா புயல் காரணமாக தைவான் மற்றும் பிலிப்பைன்ஸில் ஏறக்குறைய 25 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் புயல் காரணமாக கிழக்கு சமர் மாகாணத்தில் உள்ள சான் பாலிகார்போ நகரில் மணிக்கு 110 கிமீ (68 மைல்) வேகத்தில் காற்று வீசியதால் புவாலோய் கரையைக் கடந்தது.
நகரங்கள் மற்றும் கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன், வெள்ளம் மற்றும் இரண்டு சிறிய நிலச்சரிவுகள் ஏற்பட்டதாக நாட்டின் பேரிடர் தணிப்பு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் புயல் நெருங்கும்போது கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளில் வாழும் 73,000 க்கும் மேற்பட்ட மக்கள் அரசாங்க அவசரகால முகாம்களுக்குச் சென்றதாக மாகாண அதிகாரிகள் தெரிவித்தனர்.





