இலங்கையில் எரிவாயு விலை தொடர்பில் Litro நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு
இலங்கையில் எரிவாயு விலையில் எவ்வித மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாத எரிவாயு விலை குறித்து லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள விசேட அறிவிப்பில், இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு Litro Gas நிறுவனம் இந்த மாதம் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதில்லை என தீர்மானித்துள்ளது.
அதற்கமைய, இந்த மாதம் 12.5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 3565 ரூபாயாக மாற்றமின்றி விற்பனை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
(Visited 19 times, 1 visits today)





