இலங்கையில் பாடசாலைகளின் கல்விச் செயற்பாடு குறித்து வெளியான அறிவிப்பு!

இலங்கையில் இன்று அனைத்து அரச பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகளும் வழமை போன்று இடம்பெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர், அதிபர்கள் இன்றைய தினமும் சுகவீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுக்கவுள்ள நிலையில் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, வேதனப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை முன்னிறுத்தி, கொழும்பு – கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்னால் நேற்று குறித்த போராட்டம் ஆரம்பமானமை குறிப்பிடத்தக்கது
(Visited 27 times, 1 visits today)