பெல்ஜியம் வழங்கிய ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்பட்டதா என்பது குறித்து விசாரணை!

ரஷ்யா – உக்ரைன் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், பெல்க்ரோட்டின் எல்லைப் பகுதியில், உக்ரைனுக்கு பிற நாடுகள் வழங்கிய ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், அங்கு பெல்ஜியம், உக்ரைனுக்கு ஆதரவாக வழங்கிய ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள பெல்ஜிய ஒலிபரப்பு VRT, “பாதுகாப்பு மற்றும் தகவல் சேவைகள் அங்கு என்ன நடந்தது என்பதை உறுதியாக அறிய ஒரு ஆய்வு தொடங்கியது.” எனத் தெரிவித்துள்ளார்.
(Visited 18 times, 1 visits today)