ஸ்ட்ரேஞ்சர் திங்ஸில்(Stranger Things) இடம்பெற்ற கட்டிடத்திலிருந்து விழுந்து உயிரிழந்த அமெரிக்க சிறுமி
அமெரிக்காவில்(America) ஐந்து மாடிக் கைவிடப்பட்ட கட்டிடத்தின் கூரையிலிருந்து விழுந்து 19 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தக் கட்டிடம் நெட்ஃபிளிக்ஸின்(Netflix) ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்(Stranger Things) திரைப்படத்தில் படப்பிடிப்பு இடமாகப் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வேலி அமைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு மூடப்பட்டு, அத்துமீறி நுழையக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டிருந்த போதிலும், லியா பால்மிரோட்டோ(Leah Palmirotto) என அடையாளம் காணப்பட்ட சிறுமி, நண்பர்களுடன் வளாகத்திற்குள் நுழைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், லியா வழுக்கி அல்லது கட்டிடத்தின் பலவீனமான பகுதியில் காலடி எடுத்து வைத்திருக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கட்டிடம் முதலில் 1960களில் ஜார்ஜியா(Georgia) மனநல நிறுவனத்தின் ஒரு பகுதியாக கட்டப்பட்டது. பின்னர் எமோரி(Emory) பல்கலைக்கழகம் இதை 1990களில் வாங்கியது. முதியோர் குடியிருப்பு வசதிக்காக 2022ம் ஆண்டில் இடிக்கப்படவிருந்த போதிலும் அந்தக் கட்டமைப்பு இன்னும் அப்படியே உள்ளது.





