அண்டை வீட்டார் உணவளித்ததற்காக வளர்ப்பு மயில்களை கொன்று சாப்பிட்ட அமெரிக்கர் கைது
புளோரிடாவைச் சேர்ந்த 61 வயதான கிரெய்க் வோக்ட், அண்டை வீட்டார் தனது இரண்டு செல்ல மயில்களுக்கு உணவளித்ததற்காக பழிவாங்கும் நோக்கில் அதை கொன்று சமைத்து சாப்பிட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்டை வீட்டாருக்கு எழுதிய ஒரு கடிதத்தில், “மயில்களுக்கு உணவளித்ததால் தான் மயில்களைக் கொன்று சமைத்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
செல்லப் பறவைகள் தொடர்பாக அண்டை வீட்டாருக்கும் இவருக்கும் வாய்மொழி வாக்குவாதம் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவர் மீது மிருகவதை தொடர்பான மூன்றாம் நிலை குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், பொது போதை, குற்றவியல் போக்குவரத்து குற்றச்சாட்டுகள் மற்றும் மோசமான தாக்குதல் போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.





