ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அமெரிக்கா
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தயார் நிலையில் வைத்திருந்த 2 ஏவுகணைகளை வான் தாக்குதல் நடத்தி அழித்ததாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.
செங்கடல் வழியாக செல்லும் சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்த, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தயார் நிலையில் வைத்திருந்த 2 ஏவுகணைகளே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளது.
தலைநகர் சனா உட்பட ஏமன் நாட்டின் 25 சதவீத பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள், ஹமாஸுக்கு ஆதரவாக இஸ்ரேல் நோக்கி செல்லும் சரக்கு கப்பல்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திவருகின்றன.
அவர்களின் ஏவுதளங்களை குறி வைத்து அமெரிக்க கடற்படை விமானங்கள் தாக்குதல் நடத்திவருகின்றன.





