ட்ரம்ப் நிர்வாகத்தால் சர்வதேச அளவில் தாழ்வு நிலையை அடைந்த அமெரிக்கா!
 
																																		டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் அமெரிக்காவிற்குள் அனுமதிக்கும் அகதிகளின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைத்துள்ள நிலையில் இது தாழ்வு நிலையை ஏற்படுத்தியுள்ளதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.
அகதிகளின் எண்ணிக்கை 01 இலட்சத்து 25 ஆயிரத்தில் இருந்து 75 ஆயிரமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கையானது ஜோ பைடனின் நிர்வாகத்தின் கீழ் இருந்ததை விட குறைவாக இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன் 2021 ஆம் ஆண்டு ஜனாதிபதி ட்ரம்பின் கீழ் அனுமதிக்கப்பட்ட 15000 அகதிகளில் பாதி பேர் மாத்திரமே உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகதிகள் உரிமைகள் குழுக்கள் ட்ரம்பின் இந்த நடவடிக்கையை விரைவாகக் கண்டித்துள்ளன.
மனித உரிமைகள் தலைவர் உஸ்ரா சேயா, அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் இது ஒரு “புதிய தாழ்வு நிலை” என்று விவரித்துள்ளார்.
அதே நேரத்தில் சர்வதேச அகதிகள் உதவித் திட்டத் தலைவர் ஷெரிப் அலி, ட்ரம்ப் “ஒரு மனிதாபிமான திட்டத்தை அரசியல்மயமாக்குகிறார்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.
 
        



 
                         
                            
