இலங்கையில் வானிலை குழப்பங்களால் மேலும் மோசமடையும் காற்றின் தரம் : மக்களின் கவனத்திற்கு!
வடக்கில் நிலவும் காலநிலை மற்றும் எல்லைக் குழப்பங்கள் காரணமாக இன்று (30) நாள் முழுவதும் காற்றின் தர சுட்டெண் (SLAQl) 92 முதல் 120 வரை இருக்கக்கூடும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
காற்றின் தர அறிக்கையின்படி, கொழும்பு நகரம் 108 முதல் 116 வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் யாழ்ப்பாணத்திலும் பொலன்னறுவையிலும் இதே நிலை 112-120க்கு இடையில் பெறுமதியாக உயரலாம்.
அதுமட்டுமின்றி, குருநாகல், வவுனியா, கண்டி, கேகாலை, காலி, பதுளை, திருகோணமலை உள்ளிட்ட பல நகரங்களில் காற்றின் தரக் குறியீடு 100க்கு மேல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.





