ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் அவசரமாக கொச்சினில் தரையிறக்கம்
சவுதி அரேபியாவின் ஜித்தா நகரிலிருந்து இந்தியாவின் கேரளாவின் கோழிக்கோடு விமான நிலையத்தை நோக்கி 160 பயணிகளுடன் பயணித்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் அவசரமாக கொச்சின் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.
தரையிறங்கும் கியர் மற்றும் டயர் பழுதடைந்ததால் இன்று (18) காலை இவ்வாறு அவசரமாக விமானம் கொச்சினில் தரையிறக்கப்பட்டுள்ளது.
இதனால், விமானத்தில் பயணித்த மற்றும் தரையில் இருந்த எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், அவசர சேவைகள் முன்கூட்டியே செயல்படுத்தப்பட்டதாகவும் கொச்சின் சர்வதேச விமான நிலைய லிமிடெட் நிறுவனம் கூறியுள்ளது.
விமானம் தரையிறங்களுக்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அதன் வலது பக்க டயர்கள் இரண்டும் வெடித்து இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் கொச்சின் சர்வதேச விமான நிலைய லிமிடெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.





