இலங்கையில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட உயர்தரப் பரீட்சை வினாத்தாள்
ஒத்திவைக்கப்பட்ட க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பரீட்சை வினாத்தாள்கள் இலங்கை விமானப்படையின் உதவியுடன் வடமாகாணத்தில் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட சில பிரதேசங்களில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.
வடக்கில் Delft தீவு, வெல்லடி மற்றும் நாகதீப ஆகிய இடங்களில் உள்ள பரீட்சை நிலையங்களில் இருந்து பரீட்சை வினாத்தாள்கள் மீட்கப்பட்டு வடமாகாண கல்வி திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக விமானப்படை தெரிவித்துள்ளது.
நேற்று இலங்கை விமானப்படையின் Bell 212 ஹெலிகொப்டர் மூலம் பரீட்சை வினாத்தாள்கள் மீட்கப்பட்டன.
நவம்பர் 25ஆம் திகதி ஆரம்பமான க.பொ.த உயர்தரப் பரீட்சை நவம்பர் 27ஆம் திகதி முதல் மூன்று நாட்களுக்கு பிற்போடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இலங்கை முழுவதும் நிலவும் சீரற்ற காலநிலையை கருத்தில் கொண்டு, பரீட்சையை டிசம்பர் 03 ஆம் திகதி வரை ஒத்திவைக்க பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகளுக்கான திருத்தப்பட்ட அட்டவணையை திணைக்களம் அறிவித்துள்ள நிலையில், க.பொ.த உயர்தரப் பரீட்சை 04 டிசம்பர் 2024 இல் மீண்டும் ஆரம்பிக்கப்படும்.