தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் எடுத்த அதிரடி நடவடிக்கை
தொழில்நுட்ப நிறுவனங்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம், மின்னிலக்கச் சேவைகள் சட்டத்தின்கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதனால் பல பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் மீதான கண்காணிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்குத் தீவிரமடையும்.
Metaவின் Facebook, Instagram தளங்கள், ByteDanceஇன் TikTok, Apple நிறுவனத்தின் App Store, இலோன் மஸ்க்கின் X, சில Google சேவைகள் எனப் பல நிறுவனங்கள் சில விதிகளுக்கு இணங்க வேண்டும்.
தீங்கு விளைவிக்கும் பதிவுகள் பரவுவதைத் தடுப்பது, குறிப்பிட்டப் பயனீட்டாளர்களை இலக்காகக் கொண்ட நடைமுறைகளைக் கட்டுப்படுத்துவது அல்லது தடை செய்வது, கட்டுப்பாட்டு அதிகாரிகளுடனும் ஆராய்ச்சியாளர்களுடனும் சில தரவுகளைப் பகிர்ந்துகொள்வது போன்ற நடவடிக்கைகளுக்கு அவை உட்பட வேண்டும்.
தீங்கு விளைவிக்கக்கூடியப் பதிவுகளைப் போதிய அளவிற்குக் குறைக்காவிட்டால் அத்தகையத் தளங்களை விசாரிக்கவும் அவற்றுக்கு அபராதம் விதிக்கவும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அதிகாரம் உள்ளது.