ஐரோப்பிய நாடு ஒன்று எடுத்த அதிரடி நடவடிக்கை!
ஐரோப்பிய நாடு ஒன்று தனது மண்ணில் வெளிநாட்டுக் கொடிகளை ‘தடை’ செய்யும் திட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது.
ஸ்காண்டிநேவிய நாடு ஒன்று ஜனவரி 2025 முதல் வெளிநாட்டுக் கொடிகளை அதன் பிரதேசத்தில் காட்சிப்படுத்துவதைக் கட்டுப்படுத்தும் திட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது என்று அதன் நீதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
Dannebrog [டேனிஷ் கொடி] டென்மார்க்கில் உள்ள மிக முக்கியமான தேசிய சின்னமாகும். இது ஒரு தேசமாக நம்மை இணைக்கும் சின்னம்” என்று நீதி அமைச்சர் பீட்டர் ஹம்மல்கார்ட் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
“கொடிகள் அல்லது பதாகைகளைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படாது, உதாரணமாக ஆர்ப்பாட்டங்கள் அல்லது விளையாட்டு நிகழ்வுகளில் கொடிகளை பறக்கவிட தடை விதிக்கப்படாது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் ஜனவரி 1, 2025 முதல் நடைமுறைக்கு வர உள்ளது.