இந்தியாவில் வறுமையில் வாழ்ந்த இரு நண்பர்களுக்கு கிடைத்த பொக்கிஷம்!
மத்திய இந்தியாவின் பன்னாவில் (Panna) இரண்டு இளைஞர்கள் அரிய வகை வைரக்கல்லை எடுத்துள்ளனர்.
சதீஷ் காதிக் மற்றும் சஜித் முகமது ஆகியோர் சில வாரங்களுக்கு முன்பு குத்தகைக்கு எடுத்த நிலத்தில் இருந்து அந்த கல்லை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கண்டெடுக்கப்பட்ட குறித்த கல் 15.34 காரட் எடைக்கொண்டது என மதிப்பிடப்பட்டுள்ளது.
“இந்தக் கல்லின் மதிப்பிடப்பட்ட சந்தை விலை சுமார் ஐந்து முதல் ஆறு மில்லியன் ரூபாயாகும்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள பன்னா, இந்தியாவின் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றாகும்.
அங்கு வாழும் மக்கள் வறுமை, நீர் பற்றாக்குறை மற்றும் வேலையின்மையை ஆகிய பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.
ஆனால் இது இந்தியாவின் பெரும்பாலான வைர இருப்புக்களுக்கு தாயகமாகவும் உள்ளது, மேலும் வைர வியாபாரிகளுக்கு ஒரு முக்கிய இடமாக திகழ்கிறது.
உலகின் முக்கிய உற்பத்தியாளர்களுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் வைர இருப்பு ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளமை குறிப்பிடத்தக்கது.





